18 ஐ. பி. எஸ் அதிகாரிகள் இடமாற்றம்...
பதிவு : நவம்பர் 04, 2018, 12:10 AM
தமிழகத்தில், 18 ஐ. பி. எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
* சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்கணேசமூர்த்தி    - டிஜிபி அலுவலக ஜஜி - ஆக பணியாற்றுவார். கட்டாய ஓய்வில் இருந்த பாலகிருஷ்ணன்   - சென்னை குற்றப்பிரிவு இணை ஆணையர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* கட்டாய ஓய்வில் இருந்த மற்றொரு " எஸ். பி "விஜயகுமார் - பொருளாதார குற்றப்பிரிவுக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். டிஜிபி அலுவலக நிர்வாக டி.ஐ ஜியாக பணியாற்றி வந்த செந்தில் குமாரி - சென்னை ரெயில்வே துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். 

* சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையர் துரை - திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். 
திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த விக்ரமன் - கணினி துறை எஸ். பி ஆக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 

* கோவை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி - மேற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை தலைமையக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த 

* கே. சண்முகம் -  பதவி உயர்வு பெற்று, தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ஆக பணியாற்றுவார். ஸ்ரீ னிவாசன் - அரியலூர் மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.  போலீஸ் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே. மீனா - பதவி உயர்வு பெற்று, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆக,  சென்னை தலைமையகத்தில் பணியாற்றுவார். மொத்தம் 18 ஐ பி எஸ் அதிகாரிகளில், 9 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.