கோயில்களுக்கு வரவேண்டிய வாடகை பாக்கி : விரிவான அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

தமிழக கோயில்களுக்கு வரவேண்டிய வாடகை பாக்கி குறித்த விவரங்களை, விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோயில்களுக்கு வரவேண்டிய வாடகை பாக்கி : விரிவான அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
x
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மாரியம்மன் கோயிலை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து நிர்வகிக்க உத்தரவிடக் கோரி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் சொத்துக்கள் மூலம் அறநிலையத்துறைக்கு வர வேண்டிய 24 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் குற்றம்சாட்டினார். பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் அளித்த நீதிபதிகள், தமிழக கோயில்களுக்கு வரவேண்டிய வாடகை பாக்கி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்