"கீழடி அகழாய்வு தகவல்களை வரலாற்று பாடநூலில் சேர்க்க வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

கீழடி அகழாய்வு தகவல்களைத் தொகுத்து மாநிலப் பாடத்திட்டத்தின் , வரலாற்று பாடநூலில் சேர்க்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கீழடி அகழாய்வு தகவல்களை வரலாற்று பாடநூலில் சேர்க்க வேண்டும் -  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
x
கீழடி அகழாய்வு தகவல்களைத் தொகுத்து மாநிலப் பாடத்திட்டத்தின் , வரலாற்று பாடநூலில் சேர்க்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

* கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், 2 ஆயிரத்து 218 ஆண்டுகளுக்கு முந்தியவை என மத்திய தொல்லியல் துறை அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

* தமிழர் நாகரிகப் பெருமையை குலைக்க பல சதிகள் நடந்தும், அவற்றை முறியடித்து இந்த உண்மை உறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

* கீழடி அகழாய்வு தகவல்களை தொகுத்து வரலாற்று பாடநூலில் சேர்க்க வேண்டும்.

* அடுத்தடுத்து புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் போது அவற்றையும் சேர்த்து சம்பந்தப்பட்ட பாடங்களை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்