விற்பனைக்காக வண்டியில் ஏற்றி வரப்பட்ட மாடுகள் : போலீசார் லஞ்சம் கேட்டு மாட்டை அவிழ்த்து விட்டதாக புகார்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச்சந்தைக்கு பொத்தமேட்டுப்பட்டியிரிருந்து காளை மாடுகளை ஏற்றி வந்த வண்டியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நிறுத்தி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
விற்பனைக்காக வண்டியில் ஏற்றி வரப்பட்ட மாடுகள் : போலீசார் லஞ்சம் கேட்டு மாட்டை அவிழ்த்து விட்டதாக புகார்
x
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள  மாட்டுச்சந்தைக்கு  பொத்தமேட்டுப்பட்டியிரிருந்து காளை மாடுகளை ஏற்றி  வந்த வண்டியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நிறுத்தி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.  லஞ்சம் தர மறுத்ததால்  ரோந்து போலீசார் மாடுகளை அவிழ்த்து விட்டதாக கூறி ஓட்டுநர் மற்றும் வண்டியில் வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாடு ஏற்றி வந்த மற்ற வேன் டிரைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்து அங்கு வந்த மணப்பாறை போலீசார் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டகாரர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்