"காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது" - சென்னை உயர் நீதிமன்றம்

காவல்துறையினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
x
கடந்த 1993 -ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலம், தோப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால்  குடிபோதையில் அவர் உயிரிழந்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான மேல்முறையீடு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது புதுச்சேரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது எனக் கூறி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 போலீசாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிபதி உறுதி செய்து தீர்ப்பளித்தார். 

காவல் துறை நம் நண்பர் என்பது வெறும் காகிதங்களில் தான் இருக்கிறதே தவிர, உண்மை நிலை அவ்வாறு இல்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, புகார் வந்தால், அவற்றை பணம், அரசியல் பலம் போன்ற தாக்கங்களுக்கு ஆளாகாமல் நேர்மையாக விசாரித்தால் மட்டுமே மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற முடியும் எனவும் அறிவுறுத்தினார்.  


Next Story

மேலும் செய்திகள்