ட்விட்டரில் காரசார விவாதத்தில் ஈடுபட்ட சின்மயி - குஷ்பூ

மீ டூ விவகாரத்தில் சின்மயி ஏன் புகார் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பினார் குஷ்பூ . இந்த கருத்துக்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
ட்விட்டரில் காரசார விவாதத்தில் ஈடுபட்ட சின்மயி - குஷ்பூ
x
* மீ டூ விவகாரத்தில் சின்மயி முன்பே ஏன் புகார் அளிக்கவில்லை என தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார் குஷ்பூ. இதற்கு சின்மயி டுவிட்டர் மூலம் பதிலளிக்க, இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

* “நான் என்ன செய்திருக்க வேண்டும் எப்போது செய்திருக்க வேண்டும் என கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் இந்த பிரச்சனை பற்றி 3 பெண்கள் பொதுவெளியில் நேரடியாக பேசியுள்ளனர் , மேலும் பல பெண்கள் பெயர்களை வெளியிடாமல் பேசியுள்ளனர். இந்த பிரச்சனை குறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?” என சின்மயி கேள்வி எழுப்பினார். 



* அதற்கு குஷ்பூ, “நான் எப்போதும் உங்கள் பக்கம் இருந்துள்ளேன் , ஆனால் என்னுடைய இந்த கேள்வி சரியானதாகத் தான் இருக்கிறது” என்று பதிலளித்தார். 



* “பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிப்பதற்கு கமிட்டி இல்லாததால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம் . இந்த மாதிரி புகார்களுக்கு தற்போது உள்ள யூனியன் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதே கேள்வி” என்று சின்மயி விவாதத்தை தொடர, “உங்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கிறது அதன் உதவியோடு புகார் அளித்து நடவடிக்கை எடுங்கள் என்பதே எனது கருத்து” என்று மீண்டும் வலியுறுத்தினார் குஷ்பு. 



* இதற்கு, ஏற்கனவே டப்பிங் கொடுப்பவர்களின் சங்கத்தில் 15க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு, புகார் அளித்த பெண் நீக்கப்பட்டார் என்றும் தவறு செய்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சின்மயி கூறினார்.



* உடனே - இது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க படவேண்டிய ஒரு விஷயம், உங்களை போல தைரியமான பெண்கள் அதை செய்யவேண்டும் என்றார் குஷ்பு. 



* சட்டப்பூர்வமாக இவர்களை எதிர்கொள்ள வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக சின்மயி தெரிவித்த பின், அதற்கு நிச்சயம் நான் பக்கபலமாக இருப்பேன் என்று குஷ்பு வாக்குறுதியும் அளித்தார். இவ்வாறு அவர்களின் உரையாடல் நேர்மறையாகவே முடிந்தது.

* இந்நிலையில் சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுலும் குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். “ உங்களை போல் முக்கியமான ஒருவர் இந்த பிரச்சனை தொடர்பாக உங்களுடைய  கேள்வி சரியானது என சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. 



* இதற்கு அடுத்து பலரும் இதே கேள்வியை கேட்க தொடங்குவார்கள். எதுவாக இருந்தாலும் இதற்கான விடையை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வோம” என ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்