அழிவின் விளிம்பில் சர்க்கஸ் தொழில்...

அழிவின் விளிம்பில் இருக்கும் சர்க்கஸ் தொழிலால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலைஞர்களின் நிலையை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்....
அழிவின் விளிம்பில் சர்க்கஸ் தொழில்...
x
வேலூர் மாவடத்தில் முகாமிட்டுள்ள சர்க்கஸ் கலைஞர்களின் சாகச நிகழ்ச்சி. சாகசத்திற்கு பஞ்சமில்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்கு தான் வழியில்லை. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், சர்க்கஸ் என்றாலே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தான். கூட்டம் கூட்டமாக சென்று கண்டு களித்தனர். ஆனால், இன்று சர்க்கஸ் கூடாரம், வெறிச்சோடிக் காணப்படுகிறது. விலங்குகளை பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

உயிரை பணயம் வைத்து வித்தை காட்டி அனைவரையும் மகிழ்விக்கும் கலைஞர்கள் மகிழ்ச்சியோடு இல்லை. படிப்படியாக சர்க்கஸ் கம்பெனிகள் மூடப்பட்டு வருகின்றன. சர்க்கஸை கண்டு ரசித்த பார்வையாளர்கள் 'இந்தக் கலையை காப்பாற்ற வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொது மக்கள் இந்தக் கலைஞர்களுக்கு, ஆதரவுக் கரம் நீட்டினால் மட்டுமே, அழிவின் விளிம்பில் இருந்து சாகசகலையான சர்க்கஸை காப்பாற்ற முடியும்.

Next Story

மேலும் செய்திகள்