தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் பட்டுப்புடவைகள்

தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் பட்டுப்புடவைகளில் புதுவரவு என்ன? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் பட்டுப்புடவைகள்
x
திருமணம் தொடங்கி விழாக் காலம் என எதுவாக இருந்தாலும் பெண்களின் தேர்வு பட்டுப்புடவைகள் தான். தங்களுக்கு விருப்பமான நிறத்தில் ஜொலிக்கும் ஜரிகை வைத்த பட்டுப்புடவைகள் என்றால் விழிகள் விரிய விரிய ஆசையாக பெண்கள் வாங்கிச் செல்வார்கள். பெண்களின் எவர்க்ரீன் சாய்ஸ் எப்போதும் பட்டுதான்.. அதில் இந்த ஆண்டு தீபாவளிக்கு புதுவரவாக ஏகப்பட்ட பட்டுப்புடவைகள் வந்திருப்பது பெண்களை உற்சாகமடைய வைத்துள்ளது. 

பட்டுப்புடவை என்றால் ஜரிகையும், முந்தானையும் தான் இருக்க வேண்டுமா என்ன? டிசைனர் சேலைகளில் உள்ளதையே பட்டுப்புடவையில் கொண்டு வந்தால் என்ன என யோசித்ததன் பலன் தான் இந்த கட்வொர்க் கொண்ட வஸ்த்ரகலா பட்டு.. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சேலைகளில் பிரதான இடம் பிடித்திருக்கிறது இந்த வஸ்த்ரகலா. அதேபோல் பட்டுப்புடவைகளில் இந்த ஆண்டு புதுவரவு சில்வர் கோட்டிங் கொடுக்கப்பட்ட புடவைகள் தான். பார்ப்போரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புடவைகளை பெண்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்கின்றனர் விற்பனையாளர்கள். அதேபோல் மென்மையான பட்டுப்புடவையில் கண்கவர் வேலைப்பாடுகள் கொண்ட எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைகளும் இந்த ஆண்டு புதுவரவு. 

பட்டுப்புடவைகளில் ஜூட் புடவைகள், செட் புடவைகளும் இந்த ஆண்டு பெண்களுக்கு ஏற்ற புதுவரவு. அதேபோல் பழமையை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் கட்டம் போட்ட பட்டுப்புடவைகளும், ஹாஃப் அண்ட் ஹாஃப் பட்டுப்புடவைகளும் இந்த ஆண்டு தீபாவளியை வண்ணமயமாக்க வந்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்