எம்.ஜி.ஆரின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள்

எம்.ஜி.ஆரின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை கேட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அப்பலோ நிர்வாகம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
எம்.ஜி.ஆரின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள்
x
அப்பல்லோ மருத்துவமனையில் எம்ஜிஆர்  அனுமதிக்கப்பட்டிருந்த போது உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஏன் அழைத்து செல்லப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதை ஒப்பிட்டு பார்க்கும் விதமாக, எம்ஜிஆரின் மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஒப்படைக்குமாறு அப்பலோ நிர்வாகத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் கேட்டு இருந்தது. 

இந்த சூழலில் அப்பல்லோ நிர்வாகம் பதில் மனு ஒன்றை ஆறுமுகசாமி ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதில் எம்.ஜி.ஆரின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தமிழக அரசிடமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. எம்.ஜி.ஆரை வெளிநாடு அழைத்துச் செல்லும் விவகாரத்தில் அப்பல்லோவிற்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரம் எதுவும் தங்களுக்கு தெரியாது என்றும் பதில் மனுவில் அப்பல்லோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்