தீபாவளி பலகாரங்கள் செய்ய அதிகம் பயன்படும் ராசிபுரம் நெய்

தீபாவளி பண்டிகைக்காக ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் நெய், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்..
தீபாவளி பலகாரங்கள் செய்ய அதிகம் பயன்படும் ராசிபுரம் நெய்
x
கமகமக்கும் நெய்யால் தயாரிக்கப்பட்ட ஸ்வீட்ஸ் வகைகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்துப் போகும். வாயில் நீர் ஊற வைக்கும் இனிப்பு வகைகள் தயாரிக்க நெய் பிரதானம். இத்தகைய நெய் உற்பத்தியில் பெயர் பெற்ற ஊர் என்றால் அது ராசிபுரம் தான். ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெய் உற்பத்தியே பிரதான தொழிலாக இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சுற்றிலும் உள்ள மலைப்பகுதியில் விவசாயம் என்பதோடு கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வருடத்தில் பாதி நாட்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், மீதமுள்ள 6 மாதங்களில் மாடுகளிடம் இருந்து பால் கறந்து அதில் இருந்து நெய் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்கொல்லிமலை, போதமலை உள்ளிட்ட மலைப்பகுதியில் கிடைக்கும் சத்தான  தாவரங்களை சாப்பிட்டு மாடுகளும் ஆரோக்யமாக வளர்கிறது.இந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கப்படும் சத்தான பால் தயிராக மாற்றப்பட்டு அதில் இருந்து வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இந்த வெண்ணையை எடுத்து முருங்கை இலைகளை போட்டு காய்ச்சி தரமான நெய்யை உருவாக்குகின்றனர் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள். முருங்கை இலைகளை போட்டு வெண்ணையை உருக்குவதால் தரமான வாசனையுடன் நெய் கிடைக்கிறதாம்... ஒரு கிலோ வெண்ணெய் குறைந்தது 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை ஆகும் நிலையில் நெய் ஒரு கிலோ 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ராசிபுரம் நெய்யின் சிறப்பே அதன் கமகம மணமும், தரமும் தான். அது இங்கு நிறைவாக கிடைப்பதால் ராசிபுரம் நெய்க்கு மக்களிடையே இருக்கும் மவுசும் அதிகம்... இதனாலேயே இங்கு தயாரிக்கப்படும் நெய் சிங்கப்பூர் , மலேசியா, அமெரிக்கா  போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இயற்கையான முறையில் இங்கு தயாரிக்கப்படும் நெய் 6  மாதங்கள் வரை கெடாது என்பதால் தீபாவளி பண்டிகைக்காக பலரும் ஆர்டர்களை கொடுத்து வருகின்றனர். பண்டிகை மற்றும் விழாக்காலங்களின் போது ராசிபுரம்  நெய்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகம் உண்டு... 




Next Story

மேலும் செய்திகள்