"சர்வதேச தொழில் நுட்பத்தில் சிலை இணைப்பு" - சிலையை ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் தகவல்

நெல்லை மாவட்டம் பழவூர் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலையின் கை சர்வதேச தொழில் நுடபத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு ஐ.ஐி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழில் நுட்பத்தில் சிலை இணைப்பு - சிலையை ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் தகவல்
x
இரண்டாயிரத்து 5 ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப் பட்டு பின்னர் மீட்கப்பட்ட நடராஜர் சிலையில் கை துண்டிக்கப்பட்டு பின்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து தொல்லியல் துறை தொழில்நுட்ப பிரிவினருடன் சேர்ந்து அந்த சிலையை பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார். இந்த கோயிலில் இருந்த 4 சிலைகள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டதை அப்போது அவர் நினைவு கூர்ந்தார். அறுக்கப்பட்ட நடராஜரின் வலது கை சர்வதேச தொழில்நுட்பத்தில் இணைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இது குறித்த விசாரணை ஒரு மாதத்தில் முடியும் என்றும் அவர் அறிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்