கன்னியாகுமரி : பரிவேட்டைக்கு புறப்பட்ட பகவதி அம்மன்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் திருவிழாவான இன்று அம்மன், பாணாசூரனை வதம் செய்ய வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி : பரிவேட்டைக்கு புறப்பட்ட பகவதி அம்மன்
x
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் திருவிழாவான இன்று  அம்மன், பாணாசூரனை வதம் செய்ய வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.  

அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் அம்மனுக்கு  அணிவகுப்பு மரியாதை செய்தனர். ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஆடிய கரகாட்டம்,  பொய்க்கால்குதிரை ஆட்டம், குயிலாட்டம் ஆகியவை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 

சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா : கத்தியால் உடலை வெட்டிக் கொண்டு வழிபாடு

கோவையில் டவுன்ஹால் அருகே அமைந்துள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக கத்திபோடும் திருவிழா நடத்தப்படும். இந்த நிகழ்வின் துவக்கமாக, பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். பின்னர், ராஜ வீதியில் ஊர்வலம் நிறைவடைந்ததும், சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்