பிறவி குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மையம்

பிறவி குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டுடன் உடல் உறுதி அதிகரிக்க நவீன பூங்கா தமிழகத்திலேயே முதல் முறையாக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் துவங்கப்பட்டுள்ளது.
பிறவி குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மையம்
x
மத்திய, மாநில அரசுகள் இணைந்து 1 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ள இந்த மையத்தில், பிறக்கும் குழந்தைகள் முதல் 18- வயதுடைய குழந்தைகள் முதல் அவர்களது குறைபாடுகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்று குறைபாடுகளுடன் வரும் குழந்தைகளுக்கு நான்கு விதமான சிகிச்சை அளிக்கும் விதமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவியுடன் 16 லட்ச ரூபாய்  செலவில் நவீன தெராபெட்டிக் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன பூங்கா உடல் வளர்ச்சி குறைவு, பார்வை திறன் இல்லாமை இதய பாதிப்பு மனநலம் பாதிப்பு என பல்வேறுவிதமான பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவியாக  உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்