திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சை பேச்சு : காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் எஸ்.ஏ. சந்திரகேகர்
பதிவு : அக்டோபர் 18, 2018, 01:02 PM
திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஏ. சந்திரகேகர் ஆஜராகி கையெழுத்திட்டார்.
திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தொடர்ந்து 15 நாட்களுக்கு, காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் ஆஜராகி கையெழுத்திட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், திருப்பதி உண்டியலை விமர்சனம் செய்ததாக, நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.