குட்கா வழக்கு : அதிகாரிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

குட்கா வழக்கில் கைதான உணவு பாதுகாப்பு அதிகாரி, மாதம் இரண்டரை லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
குட்கா வழக்கு : அதிகாரிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு
x
குட்கா முறைகேடு தொடர்பாக, அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. மேலும், குட்கா குடோன் உரிமையாளர்களான மாதவ ராவ், சீனிவாச ராவ் உமாசங்கர் குப்தா, மத்திய கலால் அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு செந்தில் முருகன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2013 முதல் 2015ம் ஆண்டு வரை குட்கா தயாரிப்பாளர்களிடம் மாதந்தோறும் இரண்டரை லட்ச ரூபாய் வரை செந்தில் முருகன் பெற்றதற்கான ஆதாரம் உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, மனு மீதான விசாரணை 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்