தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் : சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு...

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் : சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு...
x
சட்டவிரோதமான முறையில் நிலத்தடிநீர் உறிஞ்சுதலை தடை செய்தும், வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் உறிஞ்சுதலை முறைப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, 4 ஆயிரத்து 500 தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர்களுக்கு தண்ணீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது. நுகர்வோர் தங்களது லாரிகள் அல்லது அவர்களால் அங்கீகாரம் பெற்ற லாரிகளுக்கு நீர்நிரப்பும் நிலையங்களில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்