108 திவ்ய தேசங்களில் 10வது இடம் பெற்ற தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாள் கோயில்

108 திவ்ய தேசங்களில் 10 வது இடம் பெற்ற தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாளின் சிறப்புகள்
108 திவ்ய தேசங்களில் 10வது இடம் பெற்ற தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாள் கோயில்
x
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் என்ற ஊரில் இருக்கிறது ஆமருவிப் பெருமாள் கோயில். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பெற்ற கோயில் என்ற பெருமை இதற்கு உண்டு. இத்தலத்தில் மூலவராக இருக்கும் பெருமாள் தேவாதிராஜனாக அருள்பாலிக்கிறார். கோமளவல்லி தாயார், செங்கமல தாயாருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் காட்சி பக்தர்களுக்கு காணக் கிடைக்காத அதிசயம்.

தேவாதிராஜனாக இருந்த பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்ற பெயர் வந்த கதை கொஞ்சம் சுவாரசியமானதும் கூட. எம்பெருமாள் மாடு மேய்ப்பவராக மாறி பசுக்களை இந்த பகுதியில் மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது உபரிஜரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்று கொண்டிருந்த போது அந்த தேரின் நிழல் பட்டு பசுக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. 

இதைப் பார்த்த அந்த பெருமாள் அந்த தேரை தடுத்து நிறுத்தி பூமியில் அழுத்தியதால் தேரழுந்தூர் என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய கோஹத்தி தோஷம் போக்க தேவலோக அரசன் பெருமாளுக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணெய் சாத்தி வழிபட்டதால் தோஷம் நீங்கியதாக வரலாறு கூறுகிறது. இதனாலேயே பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்ற பெயர் வந்ததாம்.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் தை அமாவாசை அன்றும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு ஆயிரம் வெண்ணெய் குடங்கள் சாத்தும் வைபவம் நடக்கிறது. திருமண வரம், குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த தலத்திற்கு வந்து வழிபாடு நடத்தினால் நினைத்தது கை கூடும் என்கிறார்கள். மற்ற கோயில்களில் பெருமாளுக்கு எதிரே காட்சி தரும் கருடாழ்வார் இந்த சன்னிதியில் பெருமாளுக்கு அருகே அருள் பாலிக்கிறார். மார்க்கண்டேய மகரிஷி தவம் புரிந்த தலம் என்பதால் இங்கு வந்து வழிபாடு நடத்தினால் உயர்ந்த பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. புரட்டாசி மாதம், வைகாசி மாதம் நடக்கும் தேர்திருவிழா, கார்த்திகை உற்சவம், பகல்பத்து, ராப்பத்து உற்சவம் என விழாக்காலங்களில் அலங்கார நாயகனாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார் ஆமருவியப்பன்.


Next Story

மேலும் செய்திகள்