ஆடுகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஓமலூர் ஆட்டுச்சந்தை
பதிவு : அக்டோபர் 11, 2018, 07:06 PM
ஓமலூரில் வாரந்தோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை குறித்த சில தகவல்கள்
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடக்கும் ஆட்டுச்சந்தை அப்பகுதி மக்களிடையே பிரசித்தம்.காரணம் இந்த சந்தையில் ஆடுகள் மலிவாக கிடைக்கும் என்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வருகிறார்கள். 

வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமையில் நடக்கும் இந்த சந்தைக்கு முதல்நாளே ஆயத்தப்பணிகள் தொடங்கி விடுகிறது. அதிகாலை கூடும் இந்த சந்தை நண்பகலுக்குள் முடிந்து விடுகிறது. அந்தளவிற்கு விற்பனை அமோகமாக நடப்பதாக கூறுகிறார்கள் வியாபாரிகள்... 

வெள்ளாடு, செம்மறியாடு, குறும்பாடு, பல்லையாடு என விதவிதமான ஆடுகளை இங்கு வாங்கிச் செல்ல முடியும். வீடுகளில் வளர்ப்பதற்கும் சரி, இறைச்சி தேவைக்கும் சரி இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்ல ஏராளமானோர் வருகின்றனர். தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை நாட்களின் போது பல கோடிகளை தாண்டி விற்பனை நடக்கும் சந்தையாக இருக்கிறது. 

சேலம் மாவட்ட மக்களுக்கு தேவையான இறைச்சி தேவையை பூர்த்தி செய்யும் சந்தையாக இது இருப்பதால் பல ஹோட்டல்களுக்கு இங்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். 

5 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. சேலத்தை சுற்றிலும் பசுமையான சூழல் இருப்பதால் ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் அதிகம் இருப்பதை பார்க்க முடியும். 

ஆடுகளுக்கு தேவையான கயிறுகள், மணிகளும் இந்த சந்தையில் மலிவாக விற்பனை செய்யப்படுகிறது. விதவிதமான ஆடுகளை குறைந்த விலையில் வாங்கிச்  செல்ல உத்தரவாதம் தரும் சந்தையாக இருக்கிறது ஓமலூர் ஆட்டுச்சந்தை. 

தொடர்புடைய செய்திகள்

தாழ்த்தப்பட்ட பெண் சமையலருக்கு எதிர்ப்பு : தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை நோட்டீஸ்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

551 views

உலக கை கழுவும் தினம் : துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சியில் உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு, கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

120 views

பிற செய்திகள்

உலக கோப்பை 2019 : நம்பமுடியாத சுவாரஸ்ய தகவல்கள் - நட்சத்திர நாயகர்கள்

இந்த உலக கோப்பை போட்டியின் நட்சத்திர நாயகர்கள்... கவனிக்க வேண்டிய தகவல்கள்

261 views

15வது நாளாக அருள்பாலிக்கும் அத்திவரதர் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

காஞ்சிபுரத்தில் 15 வது நாளாக அத்திவரதரை தரிசிக்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

71 views

"சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும்" - கடம்பூர் ராஜூ

விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்ட திறப்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

24 views

ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள் ? உஷார்... ஒசூரில் நடந்த விபரீதம்

ஒசூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துக் கொண்டு பேசிய போது அது திடீரென வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1567 views

கிடப்பில் போடப்பட்ட சென்னை- புதுச்சேரி - கடலூர் வரையான ஈ.சி.ஆர். தடம்...

சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரையான ஈ.சி.ஆர் மார்க்க ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29 views

டெல்லியில் 14 பேரை கைது செய்த என்.ஐ.ஏ... தொடரும் அதிரடி கைதுகள்

டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

144 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.