மானிய விலையில் மீனவர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : அக்டோபர் 10, 2018, 09:42 AM
கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள உதவும் கருவிகளை மானிய விலையில் வழங்குவது குறித்து பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் குறித்து சர்வதேச நீதிமன்றத்தை அணுக மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி மீனவர் பாதுகாப்பு சங்க தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதாகவும்,கடந்த 6 மாதங்களில் 196 மீன் பிடி படகுகள் எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் மீனவர்கள் குழுக்களாக மீன் பிடிக்க செல்வதால் கடலோர காவல் படையினரால் அவர்களை தடுக்கவும் முடியவில்லை என்றும், மீன் பிடி படகுகளின்  இருப்பிடத்தை அறிந்து கொள்ள இஸ்ரோ கண்டுபிடித்த 786 டிரன்ஸ்பாண்டர்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நேரில் ஆஜரான இஸ்ரோ அதிகாரிகள் ஒரு டிரான்ஸ்பாண்டரின் விலை 40 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர். இந்த டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்குவது குறித்து மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

48 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2098 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

488 views

பிற செய்திகள்

"கமல் நன்றாக நடிக்கிறார், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார்" - நடிகர் ராதாரவி கடும் விமர்சனம்

கமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

2 views

"பா.ஜ.க.விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறுகிறார்" - முத்தரசன்

நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

66 views

ரஜினி என்ன செய்யப்போகிறார் என்பதை சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம் - சீமான்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.

223 views

மாசித் திருவிழா நேரத்தில் பாலம் கட்டும் பணி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

29 views

பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி - லாரியை நகர்த்தியதால் பெரும்விபத்து தவிர்ப்பு

ஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

97 views

அறிவிப்பு மூலம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார் ரஜினி - திருமாவளவன்

யாருக்கும் ஆதரவில்லை என்ற அறிவிப்பு மூலம், ரசிகர்களை நடிகர் ரஜினி ஏமாற்றிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.