குட்கா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு காவல்ஆய்வாளர் சம்பத்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

குட்கா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு காவல்ஆய்வாளர் சம்பத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குட்கா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு காவல்ஆய்வாளர் சம்பத்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
x
குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி உள்ளிட்டோரின்  வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் 2014ஆம் ஆண்டு செங்குன்றம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் சம்பத்குமார் வீட்டிலும் சோதனை நடந்தது. இதனால் இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்யக்கூடும் என்ற அடிப்படையில் முன்ஜாமீன் கேட்டு தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் சம்பத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அப்போதைய துணை ஆணையர் ஜெயக்குமாரின் உத்தரவுப்படி 2014ஆம் ஆண்டு குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை சோதனைக்காக அனுப்பி வைத்ததாகவும் மற்ற விவகாரங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்