தமிழக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை மாநகரில் கனமழை, பருவமழை கால முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
x
* சுரங்கம் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற அதிக குதிரைத் திறன் கொண்ட 458 மோட்டார் பம்புகள், 130 ஜெனரேட்டர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 109 இடங்களில் படகு வசதி,  பொதுமக்களை தங்க வைக்க 176 நிவாரண முகாம், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* மழைக்கால தொற்றுகளில் இருந்து மக்களை காக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள்,52 இடங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  

* சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்த 373 அறுவை இயந்திரங்கள், கழிவுநீர் அடைப்புகளை அகற்றும் 430 இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சி தலைமையிடங்களில் 24  மணிநேரமும் இயங்கும் தகவல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்