முத்தலாக் அவசர சட்ட பிரிவுகளை எதிர்த்து பொதுநல வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் அவசர சட்டபிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்தலாக் அவசர சட்ட பிரிவுகளை எதிர்த்து பொதுநல வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
முத்தலாக்கை தடை செய்யும் வகையில், கடந்த மாதம் 19-ஆம் தேதி மத்திய அரசு,  அவசர சட்டம் பிறப்பித்தது. இதில், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரிவுகளை, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரி ஹுசைன் அஃப்ரோஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். ஷரியத் சட்டப்படி, திருமணம் என்பது உரிமையியல் சம்பந்தப்பட்டது என்றும்,  இதை குற்றமாக மாற்றுவது சட்டவிரோதமானது எனவும், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Next Story

மேலும் செய்திகள்