வாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்
பதிவு : அக்டோபர் 02, 2018, 03:22 PM
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.
* ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது. 

* சில ஆண்டுகள் இயங்கிய அந்த எம்.எல்.ஏ அலுவலகம் பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. நூலாம்படை வைத்து, தூசி படிந்து காட்சி அளிக்கும், அந்த அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக தற்போது மாறி வருகிறது. 

* இது குறித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசுவிடம் கேட்டபோது, வாஸ்து சரியில்லாததால், உடல் மற்றும் மனதளவில் பல பிரச்சினைகளை சந்தித்ததாகவும், அதனால் அலுவலகத்திற்கு செல்வதில்லை என்றும் கூறியுள்ளார். 

* இதனால் தொகுதி மக்கள், தங்களது பிரச்சினை, குறைகளை எம்.எல்.ஏவிடம் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.