சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை..!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 86 ரூபாய் 13 காசாகவும், டீசல் 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 78 ரூபாய் 36 காசாகவும் விற்பனையாகிறது.
சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை..!
x
கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஜூலை 30ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 20 காசாகவும், டீசல் 71 ரூபாய் 55 காசாகவும் விற்பனை செய்யப்பட்டது. அன்று முதல் கடந்த 50 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ஒரு நாள் மட்டுமே சற்று குறைந்தது. 

ஆகஸ்டு 13-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும், டீசல் 5 காசுகளும் குறைந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 86 ரூபாய், 13 காசாகவும், டீசல் 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 78 ரூபாய், 36 காசாகவும் விற்பனையாகிறது.

Next Story

மேலும் செய்திகள்