3.50 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை - சாரல் மழைக்கு பின் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.
3.50 கோடி மதிப்பீட்டில்  போடப்பட்ட சாலை - சாரல் மழைக்கு பின் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி
x
பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. முன்னறிவிப்பின்றி கடந்த வாரம் இரவு நேரங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது.பழைய சாலைகளை அப்புறப்படுத்தாமல் அதன்மீதே புதியதாக எண்ணை கலந்த ஜல்லிகளை மட்டும் போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலை  ஒரு நாள் சாரல் மழைக்கே பெயர்ந்து வருவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அவசரமாக சாலை அமைத்ததற்கான காரணம் என்ன? தார்சாலை அமைப்பதற்கான மூலப்பொருட்கள் இல்லாமல் சிப்ஸ் ஜல்லியை மட்டும் ஏன் உபயோகிக்கப்பட்டது ஏன்? இந்த பணிகளுக்கு தான் மூன்றரை கோடி செலவு செய்யப்பட்டதா என பல கேள்விகளை அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு முன்வைக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்