புதிய வாக்காளராக சேர 6,31,127 பேர் விண்ணப்பம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 6,31,127 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுஹு தெரிவித்துள்ளார்.
புதிய வாக்காளராக சேர 6,31,127 பேர் விண்ணப்பம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...
x
செப்டம்பர் 1 முதல் 23 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். அதன் படி, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 44 ஆயிரத்து 933 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 115 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய, 51 ஆயிரத்து 233 பேரும்,  வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்க்கொள்ள, 89 ஆயிரத்து 194 பேரும், முகவரி மாற்றம் செய்ய, 53 ஆயிரத்து 633 பேர் என மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 260 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்க்கொள்ள கால அவகாசம் உள்ளது என்றும், வரும் அக்டோபர் 7 மற்றும் 14 ந்தேதியன்று, சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,பொதுமக்கள் பயன்படுத்துக்கொள்ளுமாறு தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்