சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை..!

சென்னையில் பெட்ரோல் விலை முதன் முறையாக 86 ரூபாயை எட்டியுள்ளது.
சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை..!
x
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், முதன் முறையாக 86 ரூபாயை பெட்ரோல் விலை எட்டியுள்ளது. கடந்த 21ஆம் தேதி அன்று 85 ரூபாய் 58 காசுகளாக இருந்த பெட்ரோல், இன்று லிட்டர் 85 ரூபாய் 99 காசுகளாக விற்கப்படுகிறது. இன்று 14 காசுகள் உயர்ந்துள்ளது.  இதுபோல, டீசல் விலை இன்று 6 காசுகள் அதிகரித்து லிட்டர் 78 ரூபாய் 26 காசுகளுக்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்