வழக்கு எண் 18/9 படம் போல் குற்றவாளியை சாட்சியாக்கிய வழக்கு: அப்பாவி இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

சினிமா பாணியில் குற்றவாளியை சாட்சியாக்கி விட்டு, சாட்சியாக சேர்க்கப்பட வேண்டியவரை குற்றவாளியாக்கியதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு எண் 18/9 படம் போல் குற்றவாளியை சாட்சியாக்கிய வழக்கு: அப்பாவி இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து
x

சென்னை குமரன் காலனியில் காட்டு ராஜா என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த ராஜேந்திரன் - மீனாட்சி தம்பதியின் ஆறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அதே குடியிருப்பில் வசித்து வந்த கூலி தொழிலாளி ஐயப்பன் மீது வழக்கு பதியப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி விமலா, நீதிபதி ராமதிலகம் அடங்கிய அமர்வு விசாரித்தது.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐயப்பனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, விடுதலை செய்யும்படி தீர்ப்பளித்தனர். 

அதே சமயம், வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட வீட்டு உரிமையாளருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அவரை குற்றம் சாட்டப்பட்டவராக்கிய நீதிபதிகள், அவருக்கு எதிரான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்