கடலூரில் பழுப்பு நிலக்கரி மூலம் 1,320 மெகாவாட் மின்உற்பத்தி

கடலூர் மாவட்டத்தில் லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி மூலம் ஆயிரத்து 320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் என்.எல்.சி. திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கடலூரில் பழுப்பு நிலக்கரி மூலம் 1,320 மெகாவாட் மின்உற்பத்தி
x
என்.எல்.சி. திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க நிபுணர் குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. 8 ஆயிரத்து 733 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த 2 அலகுகள் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான 8 புள்ளி பூஜ்யம் ஒன்பது மில்லியன் டன் லிக்னைட் என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து பயன்படுத்த முடிவு 
செய்யப்பட்டு உள்ளதாக திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், நாட்டிலேயே முதல் லிக்னைட் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் மின்உற்பத்தி நிலையம் என்ற சிறப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்