திண்டுக்கல் : விவசாய நிலங்களில் குரங்குகள் அட்டகாசம்..!
பதிவு : செப்டம்பர் 21, 2018, 03:20 PM
மாற்றம் : செப்டம்பர் 21, 2018, 03:22 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வரும் குரங்குகளால் பெரும் சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பழனி அருகே உள்ள தும்பலப்பட்டி கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், கம்பு, முருங்கை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த பகுதிக்குள் நுழைந்த 50 க்கும் மேற்பட்ட குரங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவது தென்னை காய்களை பறிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் உடனடியாக குரங்குகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.