கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது அவரது தோழி சுவாதி தான் - சாட்சியம் சொன்ன கோகுல்ராஜின் நண்பர்

கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது அவரது தோழி சுவாதி தான் என கோகுல்ராஜின் நண்பர் கதிரேசன் நீதிபதி முன் சாட்சியம் அளித்தார்.
கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது அவரது தோழி சுவாதி தான் - சாட்சியம் சொன்ன கோகுல்ராஜின் நண்பர்
x
ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கோகுல்ராஜின் நண்பர் கதிரேசன் நீதிபதி முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் சிசிடிவி காட்சிகள் காட்டப்பட்டன. அந்த வீடியோவில் இருப்பது கோகுல்ராஜ் மற்றும் சுவாதி தான் என கதிரேசன் நீதிபதி முன்பு சாட்சியம் அளித்துள்ளார். முன்னதாக வழக்கு விசாரணையின் போது சிசிடிவி வீடியோவில் இருப்பது தான் இல்லை என ஸ்வாதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்