தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...
x
இதனால் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருவதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  குடிநீருக்கும் கடைநடைகளுக்கு தேவையான உணவு உற்பத்திக்கும் - விவசாயத்திற்கும் இந்த மழை பெரிய உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் 2 மணிநேரம் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூரில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென கனமழை பெய்துள்ளது. 2 மணிநேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

சென்னையில் இடியுடன் கூடிய மழை...



சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகல் இடியுடன்  கூடிய மழை பெய்தது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு  உள்ளிட்ட இடங்களில் பரவலாக இரவும் மழை நீடித்தது. இதனிடையே,  வெப்பச்சலனம் காரணமாக  தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி - 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரமாக திடீர் மழை பெய்த‌து. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்றனர். சாலையில், மழை நீர் தேங்கியது. இது ஒருபுறம் இருக்க மழையால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


அந்தமான் கடலுக்கு செல்ல வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு, 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்