ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
பதிவு : செப்டம்பர் 16, 2018, 11:39 AM
விழுப்பரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் உள்ள மல்லிநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்தக் கோயிலில் சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார். 

* இன்று வழக்கம்போல் கோயிலுக்கு வந்த பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மல்லிநாத தீர்த்தங்கரர் சிலைகள் இரண்டும்,  தர்நேந்திரர் சிலை ஒன்றும், பத்மாவதி சிலை ஒன்றும்,  ஜோலாம்பாள் சிலை ஒன்று என மொத்தம் 5 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டிருந்தன.

* இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.