11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மீண்டும் மாற்றம்

ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்து திருத்திய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மீண்டும் மாற்றம்
x
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில், 11 ம் வகுப்பு மதிப்பெண்கள், 12 ம் வகுப்பு மதிப்பெண்களுடன் இணைத்து, ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு தனித்தனியாக தலா, 600 மதிப்பெண்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருக்கும் என்றும் புதிய அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு தேர்வுகளிலும் ஏதாவது ஒருசில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மட்டும் அளிக்கப்படும் என்றும், இவ்வகை மாணவர்கள் சம்பந்தபட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றபின் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட திருத்திய அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்