ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகன் கடத்தலில் புதிய திருப்பம்..!

நிலம் தருவதாகக் கூறி பண மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகன் கடத்தலில் புதிய திருப்பம்..!
x
திருவாரூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நீதிமோகன் என்பவரை கடந்த எட்டாம் தேதியன்று மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். பத்து கோடி ரூபாய் கொடுத்தால் தான் நீதிமோகனை விடுவிப்போம் என கடத்தல்காரர்கள் கூறியதை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

இதையடுத்து கும்பகோணம் அருகே அடைத்து வைக்கப்பட்டிருந்த நீதிமோகனை போலீசார் மீட்டனர். ஆனால் கடத்தல்காரர்கள் தப்பியோடினர். மாதத்தவணையில் நிலம் தருவதாகக்கூறி மோசடி செய்ததாக நீதிமோகன் மீது வழக்கு உள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் கடத்தியிருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். 

முடிவில் நீதிமோகனிடம் ஏமாந்து போன மன்னார்குடி அரசுப்பள்ளி ஆசிரியர் வெங்கடாசலம் கீழபனையூரைச் சேர்ந்த ஜான் கென்னடி ரசாக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலம் வாங்க நீதிமோகனிடம்  பணம் கொடுத்து ஏமாந்து போனதால் அவரைக் கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்