ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த நபர் கைது

அரக்கோணத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில், நூதனமுறையில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பலரின் பணத்தை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டான்.
ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த நபர் கைது
x
 *கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வேலூர் மாவட்டம் அரக்கோணம் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மில், பணம் எடுக்க வந்த சத்துணவு பெண் ஊழியர் ஒருவரிடம் நூதன முறையில் 40 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடிச் சென்றார். அவனின் பாணி சற்று வித்தியாசமாக இருந்தது.

* ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம், தான் உதவி செய்வதாகக் கூறி, அவர்களின் ஏடிஎம் கார்டை வாங்கிக் கொண்டு ரகசிய எண்ணையும் தெரிந்து கொள்ளும் இந்த திருடன், அவர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுப்பான். பின்னர் தான் வைத்திருக்கும் போலி ஏடிஎம் அட்டைகளில் ஒன்றை அவர்களிடம் கொடுத்தனுப்பிவிட்டு, அசல் அட்டையைப் பயன்படுத்தி பணத்தை இவனே எடுத்துக் கொள்வான். 

* அரக்கோணம் ஏடிஎம்மில், இதேபாணியில், பலரின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடனை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மீண்டும் அதே ஏடிஎம்மிற்கு வந்த திருடனை அடையாளம் கண்ட வங்கி ஊழியர்கள், அவனை லாவகமாக பிடித்து வங்கிக்குள் சிறைவைத்தனர். விசாரணையில், அரக்கோணம் விண்டர்பேட்டையைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்