பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரை - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்.
Next Story