37 பணியாளர்களுடன் தனி அலுவலகமே நடத்தி வந்த‌ ஊரமைப்பு துணை இயக்குனர்

வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன
37 பணியாளர்களுடன் தனி அலுவலகமே நடத்தி வந்த‌ ஊரமைப்பு துணை இயக்குனர்
x
வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன், முறைகேடாக வீட்டு மனை பட்டா வழங்குவதாகவும், லஞ்சம் பெறுவதாகவும் புகார் எழுந்த‌து. இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சுப்பிரமணியனிடம் விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சட்ட விரோத செயல்களுக்காகவே வள்ளலார் நகர், விவேகானந்தர் தெருவில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து, அதில் 37 பணியாளர்களை நியமித்துள்ள சுப்பிரமணியன், தனி அலுவலகமே நடத்தி வந்துள்ளார். இதற்காகவே, மாதம்தோறும் 3 லட்சம் செலவு செய்துவருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன சுப்பிரமணி, சட்ட விரோத செயல்களுக்காக தனி அலுவலகமே நடத்தி வந்துள்ளது லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்