விநாயகர் சிலை : அரசாணையை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

விநாயகர் சிலைகளை வைக்கவும், கரைக்கவும் நிபந்தனைகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
விநாயகர் சிலை : அரசாணையை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
x
விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகளை வைக்கவும்,  கரைப்பதற்கும் நிபந்தனைகள் விதித்து கடந்த மாதம் 9ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் தடையில்லாச் சான்று பெற்று, ஒரு மாதத்திற்கு முன்பே அரசின் அனுமதி பெற வேண்டும், 10 அடிக்கு மேல் சிலை வைக்கக்கூடாது,  மாட்டு வண்டி பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட 24  விதிகள் வகுக்கப்பட்டன. இதை எதிர்த்து, வசந்த குமார், வழக்கறிஞர் சுடலையாண்டி ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே அரசாணை பிறப்பித்துள்ளதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்