கடலூர் : விளம்பர பதாகைகள் வைக்க மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள்

விளம்பரப் பதாகைகள் கட்ட பழமையான மரங்களில் அடிக்கப்பட்டு இருந்து 5 கிலோ ஆணிகளை கடலூர் இளைஞர்கள் அகற்றியுள்ளனர்.
கடலூர் : விளம்பர பதாகைகள் வைக்க மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள்
x
கடலூர் நகரின் முக்கிய சாலைகளின் இருபுறமும்  100 ஆண்டுகள் பழமையான ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் மீது பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத் தகடுகள் ஆணிகள் மூலம் அடிக்கப்பட்டு தொங்க விடப்பட்டு உள்ளது. 

இந்த ஆணிகளை அகற்ற கடலூர் சிறகுகள் அமைப்பினர் மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். சுமார் 50 பேர் 3 குழுக்களாகப் பிரிந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். பழைய ஆட்சியர் அலுவலக சாலை, வணிக வரித்துறை அலுவலக சாலை, கடற்கரை சாலையில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை நெம்புகோல் உதவியுடன் அகற்றி உள்ளனர். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர்கள், முதல் நாளில் மட்டும் சுமார் 75 மரங்களிலிருந்து 5 கிலோ ஆணிகளை அகற்றியதாக தெரிவித்துள்ளனர். மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்