தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. இதில், திருத்தம் மேற்கொண்ட பின்னர், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
   மதுரை மாவட்டத்தில், 10 தொகுதிகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் நடராஜன்  வெளியிட்டார். இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை திருத்தம் தொடர்பான மனுக்களை வழங்கலாம் என்று அவர் தெரிவித்தார். 
   நாகப்பட்டினம் மாவட்டத்தில், 6 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் வெளியிட்டார். மொத்தம், 12 லட்சத்து 49 ஆயிரத்து 537 வாக்காளர்கள் உள்ளதாக அவர் கூறினார். 
விழுப்புரம் மாவட்டத்தில், 11 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சுப்பிரமணியன் வெளியிட்டார். சுமார் 53 ஆயிரத்து 710 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
   புதுக்கோட்டை மாவட்டத்தில், 6 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கணேஷ் வெளியிட்டார். சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
   புதுச்சேரி தலைமைச் செயலகத்தில், தேர்தல் அதிகாரி கந்தவேலு, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இனி வரும் தேர்தல்களில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில், இயந்திரம் பொருத்தப்படும் என்று, அவர் தெரிவித்தார்.
 

   தர்மபுரி மாவட்டத்தில், 5 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் மலர்விழி வெளியிட்டார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெற்றுக் கொண்டார். 

   சேலம் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ரோகிணி வெளியிட்டார். அப்போது, சிறப்பு முகாம்களை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, அவர் வேண்டுகோள் விடுத்தார்.



Next Story

மேலும் செய்திகள்