செப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு

செப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
செப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு
x
* அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ,அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

* சென்னை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அரசு அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராமலிங்கம்,  தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால்,  ஆகஸ்ட் 27ஆம் தேதியில் இருந்து அரசு சம்பந்தப்பட்ட  அனைத்து விதமான வேலைகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

* மேலும்,  செப்டம்பர் 12 ஆம் தேதி கோட்டையை நோக்கிய பேரணியும் செப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்