தமிழகத்தில் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு அடுத்த வாரம் விசாரணை - உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை, அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு அடுத்த வாரம் விசாரணை -  உச்சநீதிமன்றம்
x
தமிழகத்தில் மட்டும் 69 சதவீதம் இடஒதுக்கீடு அமலில் இருப்பதாகவும், இதனால் பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி படிப்பதற்கான வாய்ப்பு பறிபோவதாகத் கூறி உச்சநீதிமன்றத்தல் பலர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த சஞ்சனா என்ற மாணவி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் அவசர வழக்காக விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்