ஆசிரியராக பணியாற்றும் போது மேற்படிப்பு படிக்கும் நடைமுறை : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

கல்லூரிகளில் முழுநேர ஆசிரியராக பணியாற்றும் போது முழு நேர மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆசிரியராக பணியாற்றும் போது மேற்படிப்பு படிக்கும் நடைமுறை : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
x
தனியார் பொறியியல் கல்லூரியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றும் போது, உரிய அனுமதியின்றி முழுநேர மேற்படிப்பு படித்த சண்முகவள்ளி என்பவரின் தேர்வுகளை ரத்து செய்து, அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக் கோரி சண்முகவள்ளி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பல்கலைக் கழகம், கல்லூரிகளின் அனுமதியின்றி ஆசிரியர்கள் எவரும் முழு நேர மேற்படிப்பை படிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும் ஆசிரியராக பணியாற்றும் போதே, மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது எனக் கூறி அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்