கேரளா பெருவெள்ளம் எதிரொலி : காய்கறிகள் ஏற்றுமதி பாதியாக குறைந்த‌து

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் காய்கறிகள் பாதியாக குறைந்துள்ளன.
கேரளா பெருவெள்ளம் எதிரொலி : காய்கறிகள் ஏற்றுமதி  பாதியாக குறைந்த‌து
x
கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி என பல வகை காய்கறிகள், மேட்டுப்பாளையம் சந்தையில் இருந்து தர‌ம் பிரித்து கேரளாவிற்கு அனுப்ப‌ப்பட்டு வந்தன. தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால், காய்கறிகள் ஏற்றிச்சென்ற லாரிகள் பாதி வழியிலே நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஓட்டுனர்கள் பலர் கேரளாவிற்கு செல்வதற்கும் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு எடுத்துச்செல்லப்படும் காய்கறிகளின் அளவு பாதியாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்