திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் பாலியல் ரீதியாக தவறாக ஈடுபடுத்தப்பட்டதாக வழக்கு : 2 காவலர்கள் விடுதலை
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 12:21 PM
திருட்டு வழக்கில் கைதான சிறுவர்களை இயற்கைக்கு மாறாக பாலியல் உறவில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 காவலர்களை விடுதலை செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு செல்போன் திருட்டு தொடர்பான புகாரில் 5 சிறுவர்களை கைது செய்த போலீசார், அவர்களை மாம்பலம் காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். அன்றைய தினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த  காவலர்கள் சேதுராமன், சீனிவாசன் ஆகியோர் சிறுவர்களை ஓரின சேர்க்கை ஈடுபட வைத்து ரசித்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா விசாரித்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளும்  பிறழ்சாட்சியம் அளித்துள்ள நிலையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் 2  காவலர்களையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தைவேலு என்பவர் கைது செய்யப்பட்டார்.

70 views

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

323 views

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தின் கீழ் இரண்டு முதியவர்கள் கைது

தேனி: 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜீவமணி மற்றும் ராசு என்ற இரு முதியவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்

692 views

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி : பெற்றோர் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கனத்தம் பூண்டி பகுதியில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

331 views

பிற செய்திகள்

மாநில அளவிலான கைப்பந்து போட்டி : நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது

68 வது மாநில அளவிலான சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்கியது .

17 views

குழந்தைகளுடன் தங்குமிடம் கேட்டு அலைந்த பொதுமக்கள் : அங்குமிங்கும் அலைக்கழித்த அதிகாரிகள்

திருப்பூரில் வீட்டுமனை கேட்டு ஆட்சியர் அலுவலகம் வந்தவர்களை, அதிகாரிகள் மற்றும் போலீசாரால் விரட்டப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 views

வருகிற 20 - ந்தேதி - வடக்கு பச்சையாறிலிருந்து தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

13 views

வீட்டில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்ற போலீசார் : போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

தங்களை தாக்கிவிட்டு வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்ணை, கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, உடுமலை கவுசல்யா மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்.

204 views

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு...

எட்டு வழிச்சாலைக்கு மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என கடந்த 4-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

11 views

ஆன்-லைன் மருந்து வணிக தடை விவகாரம்: நிரந்தரமாக தடை விதிக்க கோரிக்கை

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்வன், தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.