பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாட்டம் - ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அடி உதை

சென்னை அம்பத்தூரில் பேருந்தை வழிமறித்து நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் 9 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாட்டம் - ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அடி உதை
x
சென்னை அம்பத்தூரில் பேருந்தை வழிமறித்து நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் 9 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். வியாழக்கிழமை பிற்பகலில் பேருந்தை வழிமறித்து மாணவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் கேக் வெட்டியுள்ளனர். இதனை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்டித்ததால் அவர்களை தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் 2 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை 7 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்