வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் - விவசாயிகள்

வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், கர்நாடகா, கேரளாவில் இருந்து தற்போது கிடைக்கும் நீரை சேமித்து வைத்திருக்க முடியும் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் - விவசாயிகள்
x
அணைகள் நிரம்பினால், ஆறுகளின் வறட்சியான பகுதிக்கு நீரை திருப்பி விட்டு  சேமிப்பதற்காக வகுக்கப்பட்ட வைகை குண்டாறு இணைப்பு திட்டம், செயல்படுத்தப்படவில்லை என்று விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

 தற்போது பருவமழை அதிகரித்து, கர்நாடகாவில் இருந்து அதிகப்படியான தண்ணீர் கிடைத்துவரும் நிலையில், அதனை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் கலக்க விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தியிருந்தால், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர் என 5 மாவட்ட கண்மாய்கள் நிரம்பி இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதோடு கடைமடை விவசாயிகளும் இத்திட்டத்தால் பயனடைய முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்