சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு : செங்கல்பட்டை நாடும் தென்னக ரயில்வே

சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தென்னக ரயில்வே,செங்கல்பட்டை நாடியுள்ளது
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு : செங்கல்பட்டை நாடும் தென்னக ரயில்வே
x
தெற்கு ரயில்வேயின் தண்ணீர் தேவையை செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரி பூர்த்தி செய்கிறது. சென்னையில் இருந்து இயக்கப்படும் ரயில்களுக்கான நீர்த் தேவை இங்குள்ள நீர் நிலைகளில் இருந்தே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தென்னக ரயில்வே, செங்கல்பட்டை நாடியுள்ளது. செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரியில் இருந்து தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில்களில் நிரப்பப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலைய பிளாட்பாரம் அருகிலேயே ஏரியின் முகப்பு உள்ளதால் ரயில் டேங்குகளில் தண்ணீர் நிரப்பும் பணியும் எளிதாகவே உள்ளது. இதனால் தண்ணீர் தேவையை எளிதாக சமாளித்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்