பள்ளிகளில் பாலியல் கல்வி - தமிழக அரசு விளக்கம்

பள்ளிகளில் பாலியல் கல்வி வழங்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் பாலியல் கல்வி - தமிழக அரசு விளக்கம்
x
பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாலியல் கல்வி வழங்குவது மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. சார்பில் உதவி ஐ.ஜி., மகேஸ்வரன் ஆஜராகி நீதிபதி கிருபாகரன் முன்பு பதிலளித்தார். அப்போது, பள்ளிகளில் பாலியல் கல்வி வழங்குவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதற்கு மாற்றாக,  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டது. 

அதேபோல, அரசு மற்றும் வர்த்தக கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 87 ஆயிரத்து 743 கட்டிடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 32 மாவட்டங்களிலும், நடமாடும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டு, 2014 - 15ல் 3 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்களுக்கும் 2015 - 16ல் 3 லட்சத்து 83 ஆயிரம் மாணவர்களுக்கும், 2016 - 17 ல் 2 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பதிலில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்